கமல்ஹாசனின் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் - வெளியான அறிவிப்பு


கமல்ஹாசனின் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் - வெளியான அறிவிப்பு
x

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் கமல்ஹாசன் பல படங்களை தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 56-வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது. அதன்படி, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் தேசிங் பெரியசாமி, இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், "சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது, இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.Next Story