தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் - இளையராஜாவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து


தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் - இளையராஜாவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
x

இளையராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

'அன்னக்கிளி' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இளையராஜா. இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது. இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் பிறந்தநாள் விழா இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார்.

இந்த நிலையில் இளையராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது.

இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.


1 More update

Next Story