கோவிலுக்குள் ஷார்ட்ஸ் அணிந்து சென்ற பெண் - படத்தை பகிர்ந்து கங்கனா ஆவேசம்


கோவிலுக்குள் ஷார்ட்ஸ் அணிந்து சென்ற பெண் - படத்தை பகிர்ந்து கங்கனா ஆவேசம்
x

இரவு ஆடைகளை அணிந்து கோவிலில் சாமி தரிசனம் செய்த பெண்ணின் புகைப்படத்தை நடிகை கங்கனா ரணாவத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

சிம்லா ,

இமாச்சல் பஷிநாத் கோவிலில் பெண் ஒருவர் இரவு ஆடைகளை அணிந்து கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ததாக ஒரு நபர் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து அந்த பெண்ணை விமர்சித்திருந்தார். அந்த ட்விட்டர் பதிவை பகிர்ந்த இந்தி திரை உலகின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் அந்த பெண்களை குறித்து தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி உள்ளார் மற்றும் தனக்கு வாடிகனில் நடந்த ஒரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.

"இவை மேற்கத்திய ஆடைகள், வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவை, நான் ஒருமுறை வாடிகனில் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்திருந்தேன், என்னை வளாகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை, நான் மீண்டும் எனது ஹோட்டலுக்குச் சென்று உடை மாற்ற வேண்டியிருந்தது. சாதாரணமாக இரவு ஆடைகளை அணியும் இந்த கோமாளிகள் மற்றும் சோம்பேறிகள். அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை, ஆனால் அத்தகைய முட்டாள்களுக்கு கடுமையான விதிமுறைகள் இருக்க வேண்டும் ..."

என்று அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.




Next Story