யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்த்தி


யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்த்தி
x

நடிகர் கார்த்தி தனது நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அசத்தல் பரிசு ஒன்றை கொடுத்து நெகிழவைத்துள்ளார்.

உண்மையான நட்புக்கு மரியாதை கொடுப்பதில் மிகவும் கெட்டிக்காரர் நடிகர் கார்த்தி. அவர் நடித்த பருத்தி வீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் விரைவில் திரைக்கு வர இருக்கும் 'விருமன்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா.கார்த்தியும், யுவன் சங்கர் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள்.

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு விலை உயர்ந்த பிரிமியம் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கார்த்தி. இரண்டு பேரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அந்த பருவத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். திரையுலகில் யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி அவருக்கு இந்த அன்பு பரிசை வழங்கியதாக கார்த்தி தெரிவித்தார்.


Next Story