பாராளுமன்றத்தில் கார்த்தியின் 'சர்தார்' படப்பிடிப்பு


பாராளுமன்றத்தில் கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு
x

கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. கார்த்தியின் ‘சர்தார்’ படத்தில் வெளிநாட்டு காட்சிக்காக 4 கோடி செலவிடப்பட்டது.

கார்த்தி இப்போது, 'சர்தார்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்த படங்களில் மிக அதிக செலவில் தயாராகி வரும் படம் இது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் அசர்பைசான் நாட்டில் நடந்தது. அங்குள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

"இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சி களுக்காக மட்டுமே அசர்பைசான் நாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜார்ஜியாவிலும் சில காட்சிகள் படமானது. அந்த வெளிநாட்டு காட்சிகளுக்காக ரூ.4 கோடி செலவிடப்பட்டது.

தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. கார்த்தியுடன் ராசிகன்னா, லைலா, யூகிசேது, முனீஷ்காந்த், மாஸ்டர் ரித்விக் ஆகியோர் நடிக்கிறார்கள்" என்று, அந்தப் படத்தின் டைரக்டர் பி.எஸ்.மித்ரன், தயாரிப்பாளர் எஸ்.லட்சுமன் குமார் ஆகிய இருவரும் கூறினார்கள்.

1 More update

Next Story