கயல் ஆனந்தி நடிக்கும் 'ஒயிட் ரோஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு


கயல் ஆனந்தி நடிக்கும் ஒயிட் ரோஸ் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
x

அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி நடிக்கும் திரில்லர் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'.

சென்னை,

கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. 2021-ல் மூடர்கூடம் இயக்குனர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட ஆனந்திக்கு ஒரு மகள் இருக்கிறார். இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ஆனந்தி நடித்துள்ள 'மங்கை' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி நடிக்கும் திரில்லர் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இந்த படத்தை பூம்பாரை முருகன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், விஜித், ரூசோ ஶ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story