கயல் ஆனந்தி நடித்துள்ள 'ஒயிட் ரோஸ்' படத்தின் டிரைலர் வெளியானது


கயல் ஆனந்தி நடித்துள்ள ஒயிட் ரோஸ் படத்தின் டிரைலர் வெளியானது
x

'ஒயிட் ரோஸ்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. சமீபத்தில் இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ஆனந்தி நடித்து வெளியான 'மங்கை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி நடித்துள்ள திரில்லர் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இந்த படத்தை பூம்பாரை முருகன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், விஜித், ரூசோ ஶ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'ஒயிட் ரோஸ்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஒயிட் ரோஸ்' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Next Story