பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் மரணம்


பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் மரணம்
x

மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் காலமானார்.

திருவனந்தபுரம்,

மலையாளம், தமிழ், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மூத்த மலையாள நடிகரான கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கசான் கான், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செந்தமிழ்பாட்டு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள சினிமாவிலும் நடிகராக வலம்வந்தார். பெரும்பாலும் இவர் வில்லன் வேடம் ஏற்று நடித்த வந்தார். சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தைப் போல, வல்லரசு, முறைமாமன் என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

1993ல் வெளியான கந்தர்வம் படத்தின் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமான இவர், வர்ணபகிட்டு, தி கிங், தி டான், மாயாமோகினி, ராஜாதிராஜா, மரியாதா ராமன், லைலா ஓ லைலா உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.


Next Story