சவாலான வேடத்தில் கீர்த்தி சுரேஷ்


சவாலான வேடத்தில் கீர்த்தி சுரேஷ்
x

புதிய படத்தில் மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் இளம்பெண் தன்னை சார்ந்தவர்களை காக்க நடத்தும் போராட்டத்தில் தன்னையே அறிந்து கொள்ளும் சவாலான வேடத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கைவசம் மாமன்னன், தசரா, சைரன், தெலுங்கில் போலோ சங்கர் ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில் அடுத்து ரகு தாத்தா என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார். இளம்பெண் தன்னை சார்ந்தவர்களை காக்க நடத்தும் போராட்டத்தில் தன்னையே அறிந்து கொள்ளும் சவாலான வேடத்தில் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடத்தில் வருகிறார். இந்த படத்தை கே.ஜி.எப், காந்தாரா போன்ற கன்னட படங்களை தயாரித்த விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். சுமன் குமார் டைரக்டு செய்கிறார். இவர் `தி பேமிலிமேன்' என்ற பிரபலமான வெப் தொடரில் கதாசிரியராக பணியாற்றியவர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. ஒளிப்பதிவு: யாமினி யக்ன மூர்த்தி, இசை: ஷான் ரோல்டன்.


Next Story