முதல் தடவையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்த கீர்த்தி சுரேஷ்


முதல் தடவையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்த கீர்த்தி சுரேஷ்
x

‘சைரன்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனான ஜெயம் ரவி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. ராஜராஜ சோழனாக நடிக்க என்ன தவம் செய்தேனோ என்று நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார். பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகிலன் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் அடுத்து 'சைரன்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் முதல் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் டைரக்டு செய்கிறார். சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இது ஜெயம் ரவிக்கு 31-வது படம் ஆகும்.


Next Story