இந்தி தெரியாது போயா... கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா' பட டீசர்...!


இந்தி தெரியாது போயா... கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா பட டீசர்...!
x

கீர்த்தி சுரேஷ் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் 'ரகு தாத்தா' படத்தின் டீசர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டீசரில் கீர்த்தி சுரேஷ் பேசும் 'இந்தி தெரியாது போடா', தமிழ்ல சொல்லுங்க சார் ஒன்னும் புரியல' போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

1 More update

Next Story