ரூ.3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் தென்னிந்திய திரைப்பட நிறுவனம்


ரூ.3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் தென்னிந்திய திரைப்பட நிறுவனம்
x

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் 3000 கோடி முதலீட்டில் வர இருக்கும் 5 மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க உள்ளது.

சென்னை

தென்னிந்தியத் திரையுலகம் தற்போது மெகா படஜெட் படங்களை தயாரித்து வருகிறது. கன்னடத் திரைப்படத் துறை கடந்த ஆண்டு இந்தியத் திரையுலகின் இரண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களான கேஜிஎப், கேஜிஎப்2 மற்றும் காந்தாரா ஆகிய படங்களை வழங்கி உள்ளது.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த கேஜிஎப்,கேஜிஎப் 2 மற்றும் காந்தாரா ஆகிய படங்கள் இந்திய அளவில் வெற்றிப்படங்களாக அமைந்தன.

ஹோம்பலே பிலிம்ஸின் இணை நிறுவனர் விஜய் கிரகந்தூர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார்.

கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய படங்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமா பார்வையாளர்களை ஈர்த்தது. இந்த இரண்டு படங்கள் மட்டும் ரூ.2000 கோடி வசூல் செய்து சானை படைத்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா படம் ரூ.400 கோடி வசூல் செய்தது.

ஹோம்பலே நிறுவனம் எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3000 கோடி முதலீடு செய்து, பிரம்மாண்ட படங்களை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

* சாலார் ஹோம்பலே நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்த படத்தில் கேஜிஎப் டைரக்டரான பிரசாந்த் நீல் உடன் மீண்டும் இணைந்து உள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாலார், சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

2023 செப்டம்பரில் வெளியாகும் இப்படத்தில் மலையாள சினிமாவின் பன்முக திறமையான பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

* காந்தாராவின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்பதை விஜய் கிரகந்தூர் சமீபத்தில் உறுதிப்படுத்தினார். ஹோம்பலே மீண்டும் ரிஷாப் ஷெட்டியுடன் இணைந்து காந்தாரா 2 படத்தை தயாரிக்கும் என்றும் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தினார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

* பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வரவிருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படமான டைசன் மூலம் ஹோம்பலே பிலிம்ஸ் மலையாள சினிமாவில் இறங்குகிறது. தென்னிந்திய சினிமாவின் மற்றொரு பிரபல நட்சத்திரம் மோகன் ல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் டைரக்டரே முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள டைசன், 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சூரரைப் போற்று படதில் இணைந்த சூர்யா மற்றும் டைரக்டர் சுதா கொங்கராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது படத்தை தயாரிக்க ஹோம்பலே பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளது.ஒரு பயங்கரமான கேங்ஸ்டரின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டதாக வதந்திகள் பரப்பப்படும் இப்படம், மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா என்ற படத்தை தயாரிக்க உள்ளது. சுமன் குமார் இயக்கியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த கூடுதல் விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story