குழந்தைகளை மையப்படுத்திய படம் - பார்த்திபன் கொடுத்த அப்டேட்


குழந்தைகளை மையப்படுத்திய படம் - பார்த்திபன் கொடுத்த அப்டேட்
x

கோப்புப்படம் 

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

சென்னை,

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'இரவின் நிழல்' திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நான் லீனியர் (Non-Linear) திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

இதைத் தொடர்ந்து பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் குறித்த அறிவிப்பை பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர், "குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் முதல் பார்வையை (First look) குழந்தைப் பருவத்திலிருந்தே இசையின் விசையை அசைத்துப் பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் நாளை (20.01.2024) வெளியிடுவார்" என்று குறிப்பிட்டு போஸ்டரை ஒன்றை பகிர்ந்துள்ளார்.


Next Story