"தந்தையிடம் இசையையும், தாயிடம் அன்பையும் கற்றுகொண்டேன்" - பிறந்தநாளில் ஹாரிஸ் ஜெயராஜ் நெகிழ்ச்சி ட்வீட்


தந்தையிடம் இசையையும், தாயிடம் அன்பையும் கற்றுகொண்டேன் - பிறந்தநாளில் ஹாரிஸ் ஜெயராஜ் நெகிழ்ச்சி ட்வீட்
x

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது பிறந்த நாளில் பெற்றோருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

சென்னை,

கடந்த 2001-ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது இசையில் வெளியான மெலடி வகை பாடல்கள் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளன. மேலும் நவீன இசைக்கோர்ப்பும், துல்லியமான ஒலியமைப்பும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களில் சிறப்பம்சமாக விளங்கியது.

ஏராளாமான படங்களுக்கு இசையமைத்துள்ள அவர் நினைவில் நிற்கும் பாடல்களை தனது இசையின் மூலம் கொடுத்துள்ளார். அண்மையில் 'தி லெஜண்ட்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஹாரிஸ் ஜெயராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், "இன்று நான் இருக்கும் நிலைக்காக இந்த நாளில் எனது பெற்றோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என் தந்தையிடம் இருந்து இசையை கற்றுக்கொண்டேன். என் அம்மா எனக்கு அன்பைக் காட்டவும் அடக்கமாகவும் இருக்க கற்றுக் கொடுத்தார்" என்று ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.



Next Story