இளையராஜாவின் இசையில் தயாராகும் 3 காலகட்ட கதை

செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்து இருந்தாலும், மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே உண்மையான சமத்துவ மனிதன் என்ற சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதையே இந்தப் படம்,
பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற சிவபிரகாஷ் டைரக்டு செய்யும் புதிய படம் `பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் புதுமுகம் விஜித் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார்.மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா, தீபா, சாய் வினோத், லோகு ஆகியோரும் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் சிவபிரகாஷ் கூறும்போது, ``சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை பேசும் படமாக தயாராகிறது. `பரியேறும் பெருமாள்', `அசுரன்' படங்களின் வரிசையில் இந்தப் படமும் இருக்கும்.
செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்து இருந்தாலும், மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே உண்மையான சமத்துவ மனிதன் என்ற சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதையே இந்தப் படம்,
இரு குழந்தைகளை காணவில்லை என ஆரம்பிக்கும் விசாரணை, பல அதிர்ச்சியான திருப்பங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்லும். மூன்று காலகட்டங்களில் இப்படத்தின் கதை நடக்கிறது. நாயகன் விஜித் 3 கால கட்டங்களுக்காக கடும் உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை கூட்டி குறைத்து மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார்'' என்றார். இளையராஜா இசையமைக்கிறார்.துரை வீரசக்தி தயாரிக்கிறார். ஒளிப்பதிவு: தினேஷ்குமார்.






