சுருதிஹாசனுடன் சேர்ந்து ஐ.பி.எல். மேட்ச் பார்த்த லோகேஷ் கனகராஜ்


சுருதிஹாசனுடன் சேர்ந்து ஐ.பி.எல். மேட்ச் பார்த்த லோகேஷ் கனகராஜ்
x

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 2024 ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டமான சி.எஸ்.கே - ஆர்.சி.பி அணி போட்டியை இருவரும் ஸ்டேடியத்தில் இருந்து கண்டுகளித்தனர்.

சென்னை,

தமிழ் சினிமாவின் ஆக்சன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென ஒரு தனி ஸ்டைல் இருக்கும். கடைசியாக 2023 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம். ரஜினி காந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன் நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அர்ஜூன் தாஸ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன் போன்ற பலர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அன்று அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.

சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

இந்த வெற்றி கூட்டணியில் அமையும் இப்பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ் பக்கத்தில் ' 'இனிமேல்' ஆல்பம் பாடல் வரும் 25-ம் தேதி வெளியாகும் ' என பதிவிட்டுள்ளது.

இந்த டீஸரில் லோகேஷ் - ஸ்ருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி தெறிக்க விடும் விதமாக இருப்பதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர். கமலையே மிஞ்சும் விதமாக அவரது மகள் ஸ்ருதியிடம் ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் என அவரது நடிப்பு அவதாரத்தை பலர் புகழ்ந்து வருகிறார்கள்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப்பில் பக்கத்தில் பாடல் வரும் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.

டீசரில் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் ரொமான்ஸில் இருக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றது. இந்த டீசர் சமூக வலைதளங்கலில் வைரலானது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்த காயத்ரி, "உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு. இது என்னமா" என லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 2024 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டமான சி.எஸ்.கே - ஆர்.சி.பி அணி போட்டியை இருவரும் ஸ்டேடியத்தில் இருந்து கண்டு களித்தனர். இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசரில் இடம்பெற்ற காட்சிகள் வைரலான நிலையில் தற்போது இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.


Next Story