தயாரிப்பாளராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்... பைட் கிளப் படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்


தயாரிப்பாளராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்... பைட் கிளப் படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்
x

பைட் கிளப் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

அறிமுக அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பைட் கிளப் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், 'பைட் கிளப் படத்தை மிகவும் ரசித்தேன். காட்சிகள், படத்தொகுப்பு, இசை மற்றும் நடிப்பு என அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ள ஒரு வன்முறை நிறைந்த ஆக்ஷன் திரைப்படம்.

இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத் மற்றும் படக்குழு சிறப்பான முதல் படத்தை வழங்கி உள்ளனர். விஜய்குமார் ஒரு சிறந்த நடிகராக வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்த படம் அவரை அந்த இடத்திற்கு அழைத்து செல்லும் என்று நம்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story