'லவ் டுடே' மேக்கிங் வீடியோ வெளியீடு


லவ் டுடே  மேக்கிங் வீடியோ வெளியீடு
x

இந்த மேக்கிங் வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர்.

இந்நிலையில், 'லவ் டுடே' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 45 நிமிடங்கள் உள்ள இந்த மேக்கிங் வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


Next Story