3 நாளில் 'மகாராஜா' பட வசூல் - தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு


3 நாளில் மகாராஜா பட வசூல் - தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு
x

மூன்று நாட்களில் ‘மகாராஜா’ படம் 32.6 கோடி ரூபாய் வசூலானதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும் நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

படத்திற்குக் கிடைத்த பெரிய வரவேற்பால் பல திரையரங்குகளில் மகாராஜாவுக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டில் வெளியான படங்களில் இப்படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் வெளியான மூன்று நாள்களில் உலகளவில் ரூ.32.6 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தாண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் மூன்று நாளில் இப்படமே அதிக வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story