மகாராஜா பட இயக்குனரின் படத்தில் நயன்தாரா


மகாராஜா பட இயக்குனரின் படத்தில் நயன்தாரா
x

மகாராஜா பட இயக்குனரின் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். இதன் எதிரொலியால், படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது.

திரை பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி வந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

மகாராஜா படம் மூலம் பெரிய உச்சத்திற்கு சென்ற இயக்குனர் நித்திலன், அடுத்ததாக யாரை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த நிலையில், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையை நித்திலன் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, இக்கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளதாம். இதனை, பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு மகாராணி எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது


Next Story