'நேரம் வந்தது' - 'கல்கி 2989 ஏ.டி. பட புதிய அப்டேட்


நேரம் வந்தது - கல்கி 2989 ஏ.டி. பட புதிய அப்டேட்
x

image courtecy: twitter@VyjayanthiFilms

தினத்தந்தி 21 April 2024 2:48 AM GMT (Updated: 21 April 2024 2:52 AM GMT)

'கல்கி 2989 ஏ.டி. பட அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், படத்தில் வி.எப்.எக்ஸ் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதம் 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 'கல்கி 2989 ஏ.டி படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி இன்று இரவு 7.15 மணிக்கு படத்தின் புதிய அப்டேட் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story