'அயலான்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..!


அயலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..!
x

'அயலான்' திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் 'அயலான்'. இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

'அயலான்' திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'அயலான்' திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியாகியுள்ள 20 நிமிட மேக்கிங் வீடியோவில் அயலானை உருவாக்க படக்குழு மேற்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர்கள் செய்த உழைப்பையும் பகிர்ந்துள்ளனர்.


Next Story