50 வயது நடிகை படுக்கையறையில் நிர்வாண போஸ் கொடுத்த போனி கபூர் மகன்...!


50 வயது நடிகை படுக்கையறையில் நிர்வாண போஸ் கொடுத்த போனி கபூர் மகன்...!
x
தினத்தந்தி 29 May 2023 8:06 AM GMT (Updated: 29 May 2023 8:12 AM GMT)

மலைக்கா அரோராவும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகன் அர்ஜுன் கபூரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

மும்பை

மும்பை பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர் ஆவார். இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்து வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

50 வயதாகும் இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற மகனும் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.

மலைக்கா அரோராவும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகன் அர்ஜுன் கபூரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, மலைக்கா அரோரா அர்ஜுன் கபூர் படுக்கையில் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

அவரது புகைப்படம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, ஏனெனில் அர்ஜுன் ஆடைகள் இன்று மற்றும் தனது அந்தரங்கத்தை ஒரு குட்டி குஷன் வைத்து மறைத்து இருந்தார். மலைக்கா அதற்கு "எனது சொந்த சோம்பேறி பையன்," என தலைப்பிட்டு இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த புகைப்படம் வைரலாக பரவி நெட்டிசன்களின் வரவேற்பை பெற்றது.

மலைக்காவும் -அர்ஜுனும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இருவரும் தங்கள் உறவைப் பகிரங்கப்படுத்தினர். அவர்களுக்கு இடையே 12 வயது இடைவெளி காரணமாக விமர்சிக்கபட்டனர். இருந்தும் மலைக்காவும் அர்ஜுனும் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் அன்பைப் பொழிவதில் தவறவில்லை.



Next Story