மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு


மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு
x

மலையாள நடிகர் பஹத் பாசிலிடம் நிதி பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விளக்கம் பெற்றுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம், பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் தொடர்ச்சியாக கடந்த 17-ந்தேதி நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறையினர் விளக்கம் பெற்றனர்.

இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் பஹத் பாசிலிடம் நிதி பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விளக்கம் பெற்றுள்ளனர். முன்னதாக பஹத் பாசிலுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹத் பாசில் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒ.டி.டி. தளங்கள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் முன்பணம் பெற்றதாகவும், ஆனால் அந்த படங்களில் நடிப்பதற்கான தேதிகளை ஒதுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த தொகை பஹத்தின் வருமானத்தில் சேர்க்கப்படவில்லை என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் பஹத் பாசிலிடம் வருமான வரித்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



1 More update

Next Story