பெண்களை ஏமாற்றும் திருமண மோசடி கும்பல் - நடிகை பூர்ணா


பெண்களை ஏமாற்றும் திருமண மோசடி கும்பல் - நடிகை பூர்ணா
x

நடிகை பூர்ணா தன்னை திருமண செய்வதாக மோசடி செய்ததை வெளிப்படுத்தி திருமண மோசடி கும்பலை போலீசில் பிடித்து கொடுத்தார்.

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். திருமண மோசடி கும்பலிடம் சிக்கி பூர்ணா மீண்டது பரபரப்பானது. இவருக்கும், ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ஷானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது.

இந்த நிலையில் பூர்ணா அளித்துள்ள பேட்டியில், 'எனது திருமணம் தள்ளிப்போனதால் வேறு சாதியிலோ, மதத்திலோ வரன் தேடுகிறீர்களா என்று பலர் கேட்டனர். இது எனது தாய்க்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. என் வீட்டார் மாப்பிள்ளை தேட ஆரம்பித்து மூன்று, நான்கு வருடங்கள் ஆகியும் சில காரணங்களால் எனக்கு திருமணம் முடிவாகாமல் தாமதமாகிக்கொண்டே இருந்தது. சில வரன்களின் குடும்பத்தினர் நான் நடிகையாக இருந்த காரணத்தினால் பயந்து நிராகரித்தனர். கடந்த ஜூன் மாதம் எனக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில், அம்மா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.

ஒரு கும்பல் என்னை திருமணம் செய்வதாக மோசடி செய்ததை வெளிப்படுத்தி போலீசில் பிடித்து கொடுத்தேன். மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன். ஆனால் நிறைய பெண்கள் இதுபோல் மோசடி கும்பலிடம் ஏமாந்த கதையை என்னிடம் கூறியது அதிர்ச்சியாக இருந்தது" என்றார்.

1 More update

Next Story