பொங்கலுக்கு வெளியாகும் 'மெரி கிறிஸ்துமஸ்'... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!


பொங்கலுக்கு வெளியாகும் மெரி கிறிஸ்துமஸ்... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!
x
தினத்தந்தி 16 Nov 2023 8:56 AM GMT (Updated: 16 Nov 2023 9:05 AM GMT)

விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடித்துள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது.

சென்னை,

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.

இதற்கிடையே 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.


Next Story