நடிகர் மம்முட்டியின் தாய் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி இரங்கல்

image tweeted by @Udhaystalin
நடிகர் மம்முட்டியின் தாய் பாத்திமா (93) வயது மூப்பால் காலமானார்!
சென்னை,
மலையாள திரையுலகில் உச்ச நடிகராக விளங்கி வரும் நடிகர் மம்முட்டியின் தாயார் இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
இந்த நிலையில், மம்முட்டியின் தாய் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில், "நடிகர் மம்முட்டியில் தாயார் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். மம்முட்டி சாருக்கும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






