வெளிநாட்டில் இருந்து மும்பை வந்த நடிகர் விமான நிலையத்தில் கைது


வெளிநாட்டில் இருந்து மும்பை வந்த நடிகர் விமான நிலையத்தில் கைது
x

வெளிநாட்டில் இருந்து மும்பை வந்த நடிகரை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

இந்தி திரைத்துறையை சேர்ந்த நடிகர் கமல் ரஷித் கான். இவர் தேஷ்துரோகி என்ற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

கமல் ரஷித் கான் திரைப்படங்களை விமர்சனம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறார். இவரது டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கத்தை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

இதனிடையே, 2020-ம் ஆண்டு நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் இப்ரான் குறித்து கமல் ரஷித் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மும்பை மலட் பகுதி போலீசில் கமல் ரஷித் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து விமானம் மூலம் கமல் ரஷித் நேற்று இரவு மராட்டிய மாநில மும்பைக்கு வந்தார். அவரது வருகை குறித்து தகவலறிந்த போலீசார், மும்பை விமான நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு துபாயில் இருந்து விமானத்தில் வந்த கமல் ரஷித் கானை மும்பை விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கமல் ரஷித் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story