முத்தரசன் நடிகராக அறிமுகமாகும் 'அரிசி' திரைப்படம் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


முத்தரசன் நடிகராக அறிமுகமாகும் அரிசி திரைப்படம் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
x

‘அரிசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பாரதிராஜா தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் 'அரிசி' என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் அவர் விவசாயியாக நடிக்கிறார். அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி, சுபா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை பி.சண்முகம் தயாரிக்கிறார். எஸ்.ஏ.விஜயகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். விவசாயத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படம் உணவின் முக்கியத்தை வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பாரதிராஜா தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், விவசாயிகளைப் பற்றிய மனதை நெகிழவைக்கும் கதை என்று பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.Next Story