வெங்கட் பிரபுவை கைது செய்த நாக சைதன்யா - வைரலாகும் புரோமோ வீடியோ


வெங்கட் பிரபுவை கைது செய்த நாக சைதன்யா - வைரலாகும் புரோமோ வீடியோ
x

நாக சைதன்யா நடித்துள்ள 'கஸ்டடி' படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் 'கஸ்டடி' படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புரோமோவில் வெங்கட் பிரபுவை நாக சைதன்யா கைது செய்து அவரிடம் படத்தின் அப்டேட்டை கேட்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான 'ஹெட் அப் ஹை' (Head up High) என்ற பாடல் வருகிற 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story