நாகார்ஜூனா குடும்பத்தை வம்புக்கு இழுத்த பாலகிருஷ்ணா; ஒன்று திரண்ட சைதன்யா பிரதர்ஸ்


நாகார்ஜூனா குடும்பத்தை வம்புக்கு இழுத்த பாலகிருஷ்ணா; ஒன்று திரண்ட சைதன்யா பிரதர்ஸ்
x

தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளுள் ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைக் குறிப்பிட்டு பேச்சுவழக்கில் மரியாதை குறைவாகப் பேசியுள்ளார்

சென்னை

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா விளையாட்டாகவும் கோபப்பட்டும் சில செயல்களைச் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம்.

முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க செல்போனை ஒருவர் கொடுத்த போது, அதைத் தூக்கி எறிந்தார். பின்பு மற்றொரு நிகழ்ச்சியில் அவருடன் போட்டோ எடுக்க குழந்தையுடன் ஒரு ரசிகர் சென்ற நிலையில், அந்தக் குழந்தையை விளையாட்டாக அடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கச் சொன்னார். இதுபோன்று பாலகிருஷ்ணா செய்த பல நிகழ்வுகள் சர்ச்சையாயின.

அந்த வகையில், 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் சக்சஸ் மீட்டில் பாலகிருஷ்ணா கையில் மது கோப்பையுடன் நடிகை ஹனிரோசுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது அந்த சக்சஸ் மீட்டில் பேசியுள்ளது சர்ச்சையைத் தாண்டி குறிப்பிட்ட திரைப்பிரபலங்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளுள் ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைக் குறிப்பிட்டு பேச்சுவழக்கில் மரியாதை குறைவாகப் பேசியுள்ளார்.

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் காணொளி ஆன்லைனில் காணப்பட்டது, அதில் அவர் தனது முன்னோர்கள் மற்றும் மூத்த என்டிஆர் அதாவது என்டி ராமாராவ் பற்றி பேசுவதைக் காணலாம். அவரை தனது சமகாலத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பேசிய பாலையா, "என்னுடைய அப்பா சீனியர் என்டிஆருக்கு ரங்கா ராவ் (எஸ்.வி. ரங்கா ராவைக் குறிப்பிடுகிறார்), அக்கினேனி, தோக்கினேனி மற்றும் இன்னும் சில சமகாலத்தவர்கள் இருந்தார்கள்.என பேச்சுவழக்கில் மரியாதை குறைவாகப் பேசியுள்ளார்.


இது அக்கினேனி குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக பாலகிருஷ்ணாவின் பேச்சிற்கு அக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரன்கள் நாகசைதன்யா மற்றும் அகில் அக்கினேனி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நந்தமுரி தாரக ராமராவ், அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரின் பங்களிப்புகள் தெலுங்கு சினிமாவில் பெருமை வாய்ந்ததாகவும் அசைக்க முடியாத தூண்களாகவும் இருக்கின்றன. அவர்களை தரக்குறைவு செய்யும்படி நடந்து கொள்வது நம்மை நாமே இழிவுபடுத்துவதற்கு சமமானது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக அக்கினேனி குடும்பத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாலகிருஷ்ணா தனது கருத்துக்களுக்கு இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை நெட்டிசன்கள் அவரை மீம்ஸால் கேலி செய்து வருகின்றனர்.




Next Story