பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!


பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
x

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பா.ரஞ்சித் ஒரு முழுநீள காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு 'நட்சத்திரம் நகர்கிறது' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

துஷாரா விஜயன் கதையின் மையப்புள்ளியாக இருப்பார் என்பதையும் அவரது கதாபாத்திரத்தை சுற்றி படம் நகரும் என்பதையும் குறிக்கும் வகையில் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அமைந்துள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பாக முடிவடைந்து, படத்தின் போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.



Next Story