நயன்தாரா படம் தள்ளிவைப்பு
நயன்தாரா மலையாளத்தில் நடித்த ‘கோல்டு' படம் திரைக்கு வரும் நாள் தள்ளிப்போகிறது.
நயன்தாரா மலையாளத்தில் 'கோல்டு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் நாயகனாக பிருதிவிராஜ் நடித்து இருக்கிறார். அல்போன்ஸ் புத்திரன் டைரக்டு செய்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. வருகிற 8-ந் தேதி ஓணம் பண்டிகையையொட்டி கோல்டு படம் திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் அன்றைய தினமும் படம் வெளியாகாமல் தள்ளிப்போகிறது.
இது குறித்து டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோல்டு படத்தை ஓணம் பண்டிகைக்கு பிறகு வெளியிட இருக்கிறோம். தாமதத்துக்காக எங்களை மன்னிக்கவும்" என்று கூறியுள்ளார். படம் தாமதத்துக்கான காரணம் தெரியவில்லை.
கோல்டு படத்தை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் திட்டமிட்டு உள்ளனர். நயன்தாரா தற்போது ஜவான் இந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களும் கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை முடித்து விட்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது.