பிரபல மலையாள நடிகருடன் இணையும் நயன்தாரா - வெளியான அறிவிப்பு


பிரபல மலையாள நடிகருடன் இணையும் நயன்தாரா - வெளியான அறிவிப்பு
x

நயன்தாரா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.1,100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்தது.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு 'லவ் ஆக்சன் டிராமா' என்ற திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக நிவின் பாலியுடன் நயன்தாரா இணைந்துள்ளார். வீடியோ வெளியிட்டு இதனை அறிவித்துள்ளனர். இந்த படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இயக்குகின்றனர். இப்படத்திற்கு 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஆசிரியராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story