மகாபலிபுரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திருப்பதி கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்து செயல்பட்டோம்.
சென்னை,
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நாளை மறுநாள் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண இடத்தை மாற்றி வைத்துள்ளனர்.
இது குறித்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்ததாவது;-
"திருப்பதி கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்து செயல்பட்டோம். ஆனால், பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால், மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவை மாற்றினோம். எங்களுடைய திருமணம் 9ஆம் தேதி நடைபெறும்.
எங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என குறுகிய வட்டாரத்தினருக்கு மட்டுமே திருமண அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் முன்னிலையில் திருமண செய்ய உள்ளோம்" என்று கூறினார்.
மேலும், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகியுள்ளது.