சமந்தாவுக்கு நயன்தாரா வழங்கிய பரிசு பொருள்...!


சமந்தாவுக்கு நயன்தாரா வழங்கிய பரிசு பொருள்...!
x

தனது தயாரிப்பு நிறுவனத்தின் அழகு சாதன பொருட்களை சமந்தாவுக்கு நயன்தாரா பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார்.

சினிமா தவிர சொந்தமாக பல தொழில்களிலும் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனது தோழியான நடிகை சமந்தாவுக்கு, தனது தயாரிப்பு நிறுவனத்தின் அழகு சாதன பொருட்களை நயன்தாரா பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். நயன்தரா அனுப்பிய அழகு சாதன பொருட்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, "இந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த ஆவலாக இருக்கிறேன்', என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி ஜோடியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் இணைந்து நடித்திருந்தனர். அதிலிருந்து இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர்.

அந்த நட்பின் அடையாளமாகவே சமந்தாவுக்கு, நயன்தாரா அழகு சாதனப் பொருட்களை அனுப்பி இருக்கிறார்.


Next Story