நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரல்.. என்னவா இருக்கும்?


நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரல்.. என்னவா இருக்கும்?
x

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து அங்கு படங்களில் நடிக்க முயற்சித்து வருகின்றார்.

இந்நிலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார் நயன்தாரா. சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டா கணக்கை துவங்கிய நயன்தாரா தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது நயன்தாரா போட்ட ஒரு பதிவு தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

நயன்தாரா தன் இன்ஸ்டா ஸ்டோரியில் ஐ அம் லாஸ்ட்... என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நயன்தாராவிற்கு என்னாச்சு ? என்ன பிரச்சனை ? என தெரியாமல் பதட்டத்திலும் குழப்பத்திலும் இருக்கின்றனர்.

1 More update

Next Story