'லால் சலாம்' படத்தின் புதிய பாடல் வெளியீடு


லால் சலாம் படத்தின் புதிய பாடல் வெளியீடு
x

'லால் சலாம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லால் சலாம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் 'லால் சலாம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜலாலி' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சரத் சந்தோஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story