சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'புறநானூறு' படத்தின் புதிய அப்டேட்


சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புறநானூறு படத்தின் புதிய அப்டேட்
x

இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தேசிய விருதுகளையும் வென்றிருந்தது. இந்த நிலையில், இந்த கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்த படத்துக்கு 'புறநானூறு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. சூர்யா மற்றும் சுதா கொங்கரா இருவரும் இணைந்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். அதில், "புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்தப் படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது. இது எங்கள் நெஞ்சத்துக்கு நெருக்கமானது. சிறந்த படைப்பை உங்களுக்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story