'துணிவு ' படத்தின் புதிய அப்டேட்


துணிவு  படத்தின் புதிய அப்டேட்
x

மஞ்சு வாரியர் தற்போது டப்பிங் செய்து வரும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

சென்னை,

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு 'துணிவு' என தலைப்பிட்டுள்ளது படக்குழு. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். . ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து வருகிறார்..

பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகிறதுஇந்நிலையில் படத்தின் நடிகை மஞ்சு வாரியர் தற்போது டப்பிங் செய்து வரும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைராகி வருகிறது,


Related Tags :
Next Story