இரட்டை குழந்தை விவகாரம் - ஆதாரங்களை சமர்பித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்....சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ?


இரட்டை குழந்தை விவகாரம்  - ஆதாரங்களை சமர்பித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்....சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ?
x

இரட்டை குழந்தை , விவாகரத்தில் விசாரணைக்குழுவிடம் ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை:

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் பரவியது.

இது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாடகைத் தாய் மூலம் நினைத்ததும் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆஸ்பத்திரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவ பணிகள் துறை இயக்குனருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இரட்டை குழந்தை , விவாகரத்தில் விசாரணைக்குழுவிடம் ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டதாக. கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய்முறையில் குழந்தை பெற பதிவு செய்துவிட்டதாக அதில் கூறியுள்ளனர்.ஆனால், ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.


Next Story