திருமணம் மீது நம்பிக்கை இல்லை..ஆனால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை - நடிகை பரியா அப்துல்லா கருத்து


திருமணம் மீது நம்பிக்கை இல்லை..ஆனால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை - நடிகை பரியா அப்துல்லா கருத்து
x

கடவுள் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் சூப்பர் பவர் கொடுத்திருக்கிறார் என்று நடிகை பரியா அப்துல்லா கூறியுள்ளார்.

சென்னை,

தமிழில் விஜய் ஆண்டனியுடன் 'வள்ளி மயில்' படத்தில் நடிக்கும் பரியா அப்துல்லா தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

பரியா அப்துல்லா திருமணத்தை வெறுப்பதாக கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்,எனக்கு திருமணம் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளது.

எனக்கு ஒருவேளை திருமணம் நடந்தாலும் நடக்கலாம். ஆனாலும் திருமணத்தில் ஈடுபாடு கொஞ்சமும் இல்லை. குழந்தைகள் என்றால் இஷ்டம். அதனால் நிச்சயம் தாயாவேன். ஆனால் திருமணத்தைப் பற்றி மட்டும் யோசிக்க மாட்டேன்.

கடவுள் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் சூப்பர் பவர் கொடுத்திருக்கிறார். எவ்வளவு குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தந்தையின் பொறுப்பும் தேவை.

ஒரு குழந்தையை பெற்றோர் இருவரும் சேர்ந்து வளர்த்தால்தான் அவர்கள் நல்ல முறையில் இருப்பார்கள். ஆனாலும் திருமண முறை என்றால் எனக்கு பயம் என்றார். பரியா அப்துல்லா கருத்து வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story