ஆணவமான செயல்...! பவன் கல்யாணை கடுமையாக விமர்சித்த நடிகை பூனம் கவுர்!


ஆணவமான செயல்...! பவன் கல்யாணை கடுமையாக விமர்சித்த நடிகை பூனம் கவுர்!
x

சர்ச்சைக்கு படக்குழு என்ன விளக்கம் தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். போஸ்டர் மாற்றப்படுமா அல்லது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஐதராபாத்

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறார். சுமார் 10 வருடங்களுக்கு பிறகு ஹரிஷ் ஷங்கர் மற்றும் பவன் கல்யாண் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பவன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் பூனம் கவுர் படம் குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். பவன் கல்யாணின் கால்களைக் காட்டும் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு பூனம் கவுர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம் செய்திகளில் தொடர்ந்து இடம்பெறும் பூனம் கவுர் மீண்டும் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். இப்போது பவன் கல்யாணை குறிவைத்து பூனம் கவுரின் நேரடி டுவீட்கள் பரபரப்பாகி உள்ளது. மீண்டும் பவன் புதிய படத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் பூனம் கவுர் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்.

பவன் காலடியில் உஸ்தாத் பகத் சிங் பட்டம் உள்ளது. இது சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கை அவமதிக்கும் செயல் என பூனம் டுவீட் செய்துள்ளார். இது குறித்து குறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்க வேண்டும். பகத் சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை உங்கள் காலடியில் வைப்பதில் என்ன பயன்? அவமானப்படுத்துகிறீர்களா?'' என்று பூனம் கவுர் டுவீட் செய்துள்ளார். இது ஆணவமான செயல் என்று பூனம் கவுர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சர்ச்சைக்கு படக்குழு என்ன விளக்கம் தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். போஸ்டர் மாற்றப்படுமா அல்லது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



1 More update

Next Story