தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்... ரசிகர்களிடம் உதவி கேட்ட பிரபல நடிகை


தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்... ரசிகர்களிடம் உதவி கேட்ட பிரபல நடிகை
x

பிரபல பாலிவுட் நடிகை தனது இன்ஸ்டாகிராமில் தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள் என ரசிகர்களிடம் உதவி கேட்டு பதிவிட்டு உள்ளார்.



புதுடெல்லி,



இந்தி திரையுலகில் பிரபல இளம் நடிகை ஊர்வசி ரவுதலா. சனம் ரே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு பெருமளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. சமீபத்தில் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். பான் இந்தியா திரைப்படம் ஆக தயாராகியுள்ள இந்த படம் வருகிற 28ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், நடிகை ஊர்வசி ரவுதலா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்... எனது முதல் பான் இந்தியா திரைப்படம் தி லெஜண்ட், உலகம் முழுவதும் வருகிற 28ந்தேதி திரைக்கு வரவிருக்கிறது. உங்களது அன்பு மற்றும் ஆசிகளை வேண்டுகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில், அதிரடி காட்சி ஒன்றிற்கான படப்பிடிப்பில் முழு கருப்பு வண்ண ஆடையுடன், கையில் துப்பாக்கியுடன் அவர் நடந்து வருகிறார். அவரை ரவுடிகள் கும்பல் தாக்குதல் நடத்த வருவது போன்று காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு உள்ளன.

எனினும், ஒரு மணிநேரத்தில் அந்த பதிவை அவர் நீக்கி விட்டார். தி லெஜண்ட் படத்தின் நாயகனாக, அறிமுக நடிகராக சரவணன் நடித்துள்ளார். கடந்த 18ந்தேதி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதனுடன், படத்தின் போ போ போ என்ற முதல் பாடலும் வெளிவந்தது. இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கலவையான வரவேற்பு கிடைத்து இருந்தது.

தி லெஜண்ட் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. இந்த படம் தவிர்த்து ரன்தீப் ஹூடாவுடன் இன்ஸ்பெக்டர் அவினாஷ் என்ற படத்திலும், திரில் நிறைந்த காட்சிகளுடன் உருவாகி வரும் பிளாக் ரோஸ் என்ற படத்திலும், திருட்டு பயலே 2 படத்திலும் நடிகை ஊர்வசி ரவுதலா நடித்து வருகிறார்.


Next Story