நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து..!


நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து..!
x

கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜவாழ்க்கையின் நேர்மைதான் என்னை வசீகரிக்கிறது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தங்களுக்குத் தேவையான ஏதோ ஒரு மின்னூட்டம் உங்களிடம் உள்ளதாக மக்கள் நம்புகிறார்கள். அதை மிக்க விலைகொடுத்துத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜவாழ்க்கையின் நேர்மைதான் என்னை வசீகரிக்கிறது. எதையும் மறைத்ததில்லை என்னிடம் நீங்கள் பலம், பலவீனம், பணம், பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்.

உடல், மனம், வயது கருதி நீங்கள் எடுத்த அரசியல் முடிவு உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கையெல்லாம் வழிவகுக்கும், வாழ்த்துகிறேன். விரும்பும்வரை வாழ்க. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story