அரசியல் பிரவேசமா? நடிகை திரிஷா விளக்கம்


அரசியல் பிரவேசமா? நடிகை திரிஷா விளக்கம்
x

நடிகை திரிஷா அரசியலில் ஈடுப்பட உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. இதற்கு திரிஷா சார்பில் அவரது தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா சினிமாவை தாண்டி விலங்குகள் நல ஆர்வலராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார். ஒருமுறை ஐதராபாத்தில் காரில் சென்றபோது ரோட்டோரம் அடிபட்டு கிடந்த நாயை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினார். நாய்களை தத்தெடுத்து தனது வீட்டில் வளர்த்து வருகிறார். நாய்களை தத்தெடுக்கும்படி பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பிராணிகள் நல அமைப்பின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திரிஷா அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாகவும், காங்கிரஸ் தலைவர்கள் திரிஷாவை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி வருவதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது. இதற்கு திரிஷா சார்பில் அவரது தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''திரிஷா அரசியலுக்கு நிச்சயமாக வரவில்லை. அவர் காங்கிரசில் இணையப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. திரிஷா சினிமாவில் பிசியாக இருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்" என்றார்.


Next Story