பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் 'அக நக' பாடல் வெளியாகியது..!


பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் அக நக பாடல் வெளியாகியது..!
x
தினத்தந்தி 20 March 2023 1:12 PM GMT (Updated: 20 March 2023 1:20 PM GMT)

ஏப்.28ல் திரைக்கு வரவுள்ள நிலையில் முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.

சென்னை,

பொன்னியின் செல்வன் 2' அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

முதல் பாகம் போன்று இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான 'அக நக' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.




Next Story