அழகுக்காக எனக்கு அறுவை சிகிச்சையா? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்


அழகுக்காக எனக்கு அறுவை சிகிச்சையா? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்
x

பூஜா ஹெக்டேவின் மூக்கு அழகாக இல்லை என்றும், அதை வெளிநாட்டுக்கு சென்று அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய திட்டமிட்டு இருக்கிறார் என்றும் தகவல் பரவியது. இதற்கு பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார்.

நடிகைகள் பலர் அழகுக்காக வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த வரிசையில் தமிழில் முகமூடி, பீஸ்ட் படங்களிலும், தெலுங்கு, இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டேவும் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. பூஜா ஹெக்டே நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் தோல்வி அடைந்தன. இந்த நிலையில் பூஜா ஹெக்டேவின் மூக்கு அழகாக இல்லை என்றும், அதை வெளிநாட்டுக்கு சென்று அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய திட்டமிட்டு இருக்கிறார் என்றும் தகவல் பரவியது.

இதற்கு பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''முன்னணி நடிகர், நடிகைகள் குறித்த வதந்திகள் சமீப காலமாக பரவி வருகிறது. நான் மூக்கு அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் பேசுகிறார்கள். இதில் உண்மை இல்லை. எனது உடம்பில் எந்த இடத்திலும் அறுவை சிகிச்சை செய்யவில்லை. அறுவை சிகிச்சை செய்ய வெண்டிய அவசியமும் இல்லை. இதுபோன்ற வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம். தற்போது நான் ஐதராபாத்தில் இருக்கிறேன். ஒரு மாத விடுமுறையில் வெளிநாடு செல்கிறேன். அடுத்து மகேஷ்பாபுவுடன் இணைந்து நடிக்க இருக்கிறேன்" என்றார்.

1 More update

Next Story