ஓடிடியில் வெளியானது 'போர்' திரைப்படம்


ஓடிடியில்  வெளியானது  போர் திரைப்படம்
x

மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் போர்.

சென்னை,

அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்து மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் போர். தமிழ் - இந்தி என இரு மொழிகளிலும் இப்படம் வெளியானது. இந்தியில் டாங்கி என்ற பெயரில் வெளியானது. பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கினார்.

மக்களிடையே இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. சஞ்சனா நட்ராஜன், பானு, ஜான் விஜய், விவேக் ராஜகோபால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். காலேஜில் படிக்கும் சீனியருக்கும் ஜூனியருக்கும் இடையே இருக்கும் ஈகோ, துரோகம் பற்றிய கதைக்களமாக அமைந்தது .

இந்த நிலையில் இப்படம் ஓடிடி தளமான நெட்ப்லிக்ஸில் இன்று வெளியாகியுள்ளது.


Next Story