'பவர் ரேஞ்சர்ஸ்' நடிகர் தற்கொலை
'பவர் ரேஞ்சர்ஸ்' நடிகர் ஜேசன் டேவிட் பிராங்க் காலமானார்.
தொலைகாட்சியில் 1990-களில் ஒளிபரப்பான பவர் ரேஞ்சர்ஸ் தொடர் உலகம் முழுவதும் பிரபலம். தீய சக்திகளை ரெட் ரேஞ்சர், வைட் ரேஞ்சர், கிரீன் ரேஞ்சர், பிளாக் ரேஞ்சர் என்று அழைக்கப்பட்ட பவர் ரேஞ்சர்ஸ் குழுவினர் எதிர்த்து மக்களை காப்பாற்றுவது கதை. இவர்கள் பலவித வண்ணங்களில் உடைகள் அணிந்து இருந்ததால் அப்போதைய குழந்தைகளும் அதுபோன்ற உடைகள் அணிந்தனர்.
இந்த தொடர் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் வெளியானது. இந்தியில் வந்த சக்திமான் தொடர்போலவே பவர் ரேஞ்சர்ஸ் தொடரும் புகழ்பெற்றது. இதில் ஜேசன் டேவிட் பிராங்க் கிரீன் ரேஞ்சராகவும் பின்னர் ஒயிட் ரேஞ்சராகவும் நடித்து புகழ் பெற்றார். மைட்டி ரேஞ்சர்ஸ், டர்போ பவர் ரேஞ்சர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வந்த ஜேசன் டேவிட் பிராங்க் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49. ஜேசன் டேவிட் பிராங்க் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.